தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. முதல் அமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. அரசுடனான கூட்டணியில் பா.ஜ.க. அங்கம் வகிக்கிறது. எனினும், அ.தி.மு.க. தரப்பில் முதல் அமைச்சர் பழனிசாமி அடுத்த தேர்தலுக்கான முதல் அமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதனை அக்கட்சியின் அமைச்சர்கள் பலர் ஏற்று கொண்டுள்ளனர்.
ஆனால், இதனை ஏற்பதில் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வில் குழப்பம் நிறைந்த சூழல் காணப்பட்டது. இந்நிலையில், பா.ஜ.க.வின் தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பா.ஜ.க. முதல் அமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.