நடிகர் சூரியின் நிலமோசடி வழக்கில் திருப்பம்… திமுக பிரமுகரிடம் போலீசார் விசாரணை

தமிழ் திரைப்பட நடிகர் சூரி அளித்த நிலமோசடி புகார் தொடர்பாக வழக்கில் புதிய திருப்பமாக, சிறுசேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிரபல தமிழ் காமெடி நடிகர் சூரி, ரூ. 2.70 கோடி மோசடி செய்ததாக, வீர தீர சூரன் படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சூரி புகார் மனுவை அளித்தார்.

அந்த புகாரில், வீர தீர சூரன் படத்தில் நடித்ததற்காக தனக்கு ரூ. 40 லட்சம் சம்பள பாக்கி இருந்தது. அதை திருப்பிக் கேட்ட போது நிலம் வாங்கித் தருவதாக கூடுதல் பணம் பெற்று ஏமாற்றியதாக சூரி புகார் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையான ரமேஷ் குடவாலா, காவல்துறை முன்னாள் உயர் அதிகாரி ஆவார். இந்த புகார் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

இந்நிலையில், நிலமோசடி வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நடிகர் சூரியிடம் ஏமாற்றி விற்கப்பட்டதாக குறிப்பிடப்படும் இடத்தை, வீட்டு மனைக்கான நிலம் என சான்றிதழ் அளித்த சிறுசேரி திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஏகாம்பரம் மற்றும் அவரது சகோதரர் வெங்கடேசனிடம், அடையாறு குற்றப்பிரிவு போலீசார் கடந்த இரு நாட்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!