நடிகர் ரஜினிக்கு உடல் நலக்குறைவு? உண்மை நிலவரம் இதுதான்!

நடிகர் ரஜினிகாந்த்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் தகவலை பரப்ப, அது முற்றிலும் வதந்தி என்று, அவருடைய மக்கள் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

அரசியல் கட்சி தொடங்குவதாக அவ்வப்போது போக்குகாட்டி வரும் நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தொற்றை காரணம் காட்டி அந்த முடிவை கைவிடும் திட்டத்தில் இருக்கிறார்.

ரஜினிக்கு சிறுநீரகப் பிரச்சனை என்று சமூக வலைதளங்களில் தகவல் வெளியான போது, தனக்கு உடல் நலப்பிரச்சனை இருப்பதாக, அவர் வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருந்து, காய்ச்சலுக்கு ரஜினி சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் பகிரப்பட்டன.

ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என்று ரஜினியின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் தெரிவித்துள்ளார். யாரோ விஷமிகள் கிளப்பிவிட்ட வதந்தி எனவும், அவர் விளக்கம் தந்துள்ளார்.

Translate »
error: Content is protected !!