ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கூறியுள்ளதாவது: ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், கல்வி தன்னார்வலர்கள் மூலம் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாதவர்கள், இடைநின்ற, மாற்றுத்திறன்கொண்ட குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நவ., 21 முதல் டிச.,12 வரை நடக்கிறது. மாவட்டத்தில் 1127 தொடக்க, நடுநிலை பள்ளிகளில் குடியிருப்பு கணக்கை ஆய்வு செய்து, தலைமையாசிரியர்களுடன் ஆலோசனை செய்ய வேண்டும். கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளியில் சேர்க்க முடியாத ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் விபரம் சேகரித்து, அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.கடலோரப் பகுதிகள், செங்கல் சூளைகள், அங்காடிகள், உணவகங்கள், நரிக்குறவர் காலனிகள், கட்டட வேலை நடைபெறும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடக்கிறது.
வழக்கமாக ஏப்ரல், மே மாதத்தில் கணக்கெடுப்பு நடைபெறும், இவ்வாண்டு ஊரடங்கு காரணமாக நவ.,21 முதல் டிச.,12 வரை நடக்கிறது,’.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.