காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்வதற்காக டில்லியில் உள்ள பாஜ., அலுவலகம் வந்தார்.
பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார், பின்னர் அவர் தேசிய செயலர் ரவி முன்னிலையில் பா.ஜ.வில் இணைந்தார். அப்போது மாநில பா.ஜ., தலைவர் முருகன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, பா.ஜ.க.வில் இணைவது மகிழ்ச்சி. மோடியால் மட்டும் தான் நாட்டை முன்னேற்ற முடியும். அவர் தான் நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார். நாட்டுக்கு எது நல்லது என உணர்ந்து பாஜவில் இணைந்துள்ளேன் என்றார்.