சென்னை எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஜி.கே.வாசன், ராமதாஸ் போன்ற படம் இருக்கும் போது எங்கள் பிரதமர் மோடியின் படம் எங்கே என அ.தி.மு.க. பகுதி செயலாளரிடம் பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்பினர்.
அப்போது மறந்து விட்டதாக தெரிவித்த பகுதி செயலாளர், காயிதே மில்லத், ராமதாஸ், வாசன் ஆகியோர் போட்டோ வைக்க ஞாபகம் உள்ளதா என சரமாரியாக கேள்வி எழுப்பி வெளிநடப்பு செய்தனர். அப்போது வேட்பாளர் ஜான்பாண்டியன், மாவட்ட செயலாளர் பாலகங்கா ஆகியோர் வந்தனர். தகவல் அறிந்த அவர்கள் சமாதானம் செய்து சம்பந்தப்பட்டவர்களை கண்டித்தனர்.
அதேப்போல் கொளத்தூர் தொகுதியில் பிரதமர் மோடி படம் இல்லாமல் பிரச்சாரம் செய்வதாக பா.ஜ.க.வினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மோடியின் படத்தை போடுவதை அ.தி.மு.க.வினர் தவிர்த்து வருவதாகவும் பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர். மக்கள் அதிருப்தியில் இருப்பதால் மோடியின் படம் போட்டால் விழும் ஓட்டுகள் வராது என்ற காரணத்தால் இருட்டடிப்பு செய்து இருப்பார்கள் என அ.தி.மு.க. தொண்டர்கள் பேசினர்.