மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த கனிமொழி

பெண்களுக்கு பாதுகாப்பு தரும், திருமண வல்லுறவு தடுப்புச் சட்டத்தை இந்திய பாராளுமன்றத்தில் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மூன்று நிமிடங்களுக்கொருமுறை இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிகழ்ந்து வருவதாக ஆய்வு முடிகள் தெரிவிக்கின்றன.

இதனால், கடந்த 2018-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் திருமண வல்லுறவு தடுப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அந்த சட்டம் நிறைவேறாமல் உள்ளது. இதனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான அதிக குற்றங்கள் நடைபெற்ற மாநிலங்களில் வரிசையில் கடந்த 2019-ம் ஆண்டு 59,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.  அடுத்து, 41,550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் இடத்திலும். மகாராஷ்டிரா மாநிலம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2019-ம் ஆண்டு 283 பாலியல் வன்கொடுமை மற்றும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை நிகழ்வுகள் நடந்துள்ளன.

வரதட்சணை தொடர்பான இறப்புகளைப் பொறுத்தவரை 7,115 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆசிட் தாக்குதலில் 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களைக் கடத்தியது தொடர்பாக 72,780 வழக்குகள் பதிவாகி உள்ளன.

Translate »
error: Content is protected !!