மாநில அளவில் நீட் தேர்வு நடத்த அனுமதி: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை

மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய கல்வித்துறை மந்திரிகளிடம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் நீட் தேர்வு குறித்த புதிய கோரிக்கை யை தமிழக அரசு முன் வைத்துள்ளது.  புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்றும், நீட் தேர்வை தமிழகத்துக்குள்ளேயே நடத்திக் கொள்ள என தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக பொன்முடி தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!