* அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
* தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
* பிளஸ் 2 செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது
* மருத்துவ கல்லூரிகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என தமிழக முதல்வரிடம் கே.எஸ்.அழகிரி கோரிக்கை
* பல்வேறு துறைகளின் பெயர் மாற்றம். அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
* எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எந்த சுற்றிக்கையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்துவிதமான அரசு ஊழியர்களும், பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு தெரிவிக்கிறது என பள்ளிக்கல்வி துறை ஆணையர் திரு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
* அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடம் எத்தனை? விவரங்களை இன்று மாலைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
* +2 மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில் மதிப்பெண்கள் வழங்குவது, குழுவில் யாரை இறுதி செய்யலாம் என்பது குறித்தும், ஆன்லைன் வகுப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுவது தொடர்பாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.
* ‘பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை, விரைவாக வெளியிட வேண்டும்‘ என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
* ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
* மத்திய கல்வி துறை சார்பில் கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு நேற்று முந்தினம் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம், கேரளா, பஞ்சாப், அந்தமான் நிகோபர் தீவுகள், சண்டிகர் ஆகியவை முன்னிலை பெற்றுள்ளன.