வாக்காளர்களை கவர புது அஸ்திரம்.. மிரளவிடும் கட்சிகள்.. கடிவாளம் போடுமா தேர்தல் ஆணையம்

சென்னை,

ஓட்டுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படுவதை தடுக்க கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இறுதி கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் மூழ்கி இருக்கின்றன. பூத் கமிட்டிக்கு ஆள் போடுவதிலும் பிஸியாக உள்ளன. எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் பண பலம் பொருந்திய முக்கிய வேட்பாளர்கள் ள் வைட்டமின்வை கடைசி நேரத்தில் கொடுத்து மக்களை கவர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் முன்பு போல் நேரடியாக பணம் கொடுப்பதில் சிக்கல் இப்போது அதிகமாக உள்ளது. இதற்காக சில வேட்பாளர்கள் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட கணக்குகளை சேகரிக்கப்பதாக புகார்களும் எழுந்துள்ளது. தேர்தல் நாளுக்குள் மொத்தமாக பணம்பட்டுவாடா நடத்த இந்த முறை அரசியல் கட்சியினர் கையாளக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வீடு தேடி வந்து தருவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் உள்ளதால் மாற்று வழிகளை கட்சிகள் கையாள தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வீடாக பணம் பட்டுவாடா நடக்கும் போது அதில் பாதியை கட்சி நிர்வாகிகள் அமுக்கி கொள்வதும். பாதியை மட்டும் தருவதும் என்பதாக இருந்தது.

இதனால் தற்போதைய எம்எல்ஏக்கள் உள்படபல்வேறு கட்சி வேட்பாளர்கள் கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகள் மூலம் வாக்களார்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. யாரெல்லாம் வாக்காளிப்பார்கள், யாருக்கெல்லாம் பணம் கொடுத்தால் வாக்களிப்பார்கள் என்பதை கணக்கெடுத்து கச்சிதமாக பணத்தை விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் இந்த புகார்கள் அதிகஅளவில் உள்ளது.

இதையடுத்து ஓட்டுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தப்படுவதால் கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பணப்பரிமாற்ற செயலிகளுக்கு தேர்தல் முடியும் வரை தடைவிதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மனு அளித்துள்ளார். இவரது கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் கூகுள் பே உள்ளிட்ட பல்வேறு பரிவர்த்தனைகளை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும் என்று கூறப்படுகிறது

Translate »
error: Content is protected !!