வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய துணை முதல்வரால் சர்ச்சை!

வாட்ஸ் அப் குரூப்பிற்கு, கோவா மாநில துணை முதல்வர் சந்திரகாந்த் காவ்லேக்கரின் மொபைல் போனில் இருந்து ஆபாச வீடியோ பதிவிடப்பட்ட விவகாரம், அந்த மாநிலத்தில் அதிர்வலைகளையும் சர்ச்சையையும்  ஏற்படுத்தி இருக்கிறது. 

கோவா துணை முதல்வராக இருப்பவர், சந்திரகாந்த் காவ்லேக்கர். இவர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்து பின்னர் பாஜகவுக்கு தாவியவர். அதற்கு பரிசாக துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், சந்திரகாந்த்தின் செல்போனில் இருந்து, அவர் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பிற்கு நேற்று நள்ளிரவில் ஒரு வீடியோ பதிவிடப்பட்டது.  அது சாதாரண வீடியோ அல்ல, ஆபாச படங்களை கொண்ட வீடியோவாகும். 

இதை பார்த்து குழுவில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். துணை முதல்வர் பொறுப்பில் உள்ள ஒருவர், பொதுவெளியில் பலரும் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் ஆபாச வீடியோ பதிவிடலாமா என்று பலரும் முகம் சுளித்தனர். இந்த விவகாரம் வெளியே வந்ததும், பலரும் அதிர்ச்சியடைந்தனர். கோவா முன்னணி கட்சியின் மகளிர் அணி தரப்பில், துணை முதல்வர் சந்திரகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இந்த விவகாரத்தில் இருந்து துணை முதல்வர் சந்திரகாந்த் காவ்லேக்கர், நழுவ முற்பட்டுள்ளார். தனது பெயரை களங்கப்படுத்த நடந்த சதி இது எனவும்,  தனது மொபைல்போனை ஹேக்கர்கள் சிலர் முடக்கி, இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர் விளக்கம் தந்துள்ளார். அத்துடன், சைபர் கிரைம் போலீசில் அவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்த விவகாரம் கோவா மாநிலத்தில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

Translate »
error: Content is protected !!