தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை ,
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுதேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ஜூன் 3வது வாரத்தில் இருந்து 11ஆம் வகுப்புகளுக்கான வகுப்புகளை தொடங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளியில் 10 முதல் 15 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.