போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் நடைபெறுகிறது. ஊதிய ஒப்பந்தத்தை ஆக.3 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஐந்து கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படாத நிலையில் ஆறாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

ஏற்கனவே ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இறுதி செய்யாவிட்டால் ஆகஸ்ட் 3ஆம் தேதி அல்லது அதன் பிறகு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க இருப்பதாக சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் அறிவிப்பினை வெளியிட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 3ஆம் தேதி ஆறாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயிற்சி மையத்தில் நடைபெறும் இப் பேச்சுவார்த்தையில் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் நிலையில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!