டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் பருவமழைக் காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 8,975 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கடந்த அக்டோபர் 18ம் தேதி டெங்கு காய்ச்சலுக்கு முதன்முறையாக ஒருவர் உயிரிழந்தார். இதனால் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெல்லியில் டெங்குவால் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.