ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி இந்தியாவிலும் பரவி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவியது.
இந்தியாவில் இது கர்நாடகா, குஜராத், மராட்டியம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால், இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குஜராத்தில் மேலும் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இதன் மூலம் இந்தியாவில் மொத்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.