கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு தடை.. வணிகர்கள் போராட்டம்

சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கொடைக்கானலில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள சிறுவியாபாரிகள் தமிழக அரசின் அறிவிப்பால் பாதிப்பு என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திமுக வேட்பாளர்கள் ஆய்வு

கரூரில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் திமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, இளங்கோ ஆய்வு செய்தனர். நேற்றிரவு வாக்கு இயந்திர மைய கட்டடத்துக்கு அருகே உள்ள கட்டடத்தில் கணினிகள், இணையதளம், வைஃபை இயங்கின. சந்தேகமடைந்த திமுகவினர் இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார்…

இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

இரவு நேர ஊரடங்கின் போதும் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4…

கன்யாகுமரியில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356-ஆக உள்ளது.

ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்தை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற மூவர் கைது

போபால், மத்தியப் பிரதேசத்தில் ரெம்டெசிவிர் தடுப்பூசி மருந்து குப்பியை 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற மருத்துவமனை செவிலியர் உள்பட 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட செவிலியரின் கூட்டாளிகள் ஷூம்ஹம் பர்மீர் மற்றும் புபேந்திர பர்மீர் ஆகிய இருவரையும்…

பெரும் பரபரப்பு… விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணி.. சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைப்பு

கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்த பயணியை விமான ஊழியா்கள் போலீசில் ஒப்படைத்தனா். கண்ணூரிலிருந்து சென்னை வந்த விமானம் நடுவானில் பறந்தபோது, அதில் பயணித்த பயணி ஒருவா் மாஸ்க் அணிய மறுத்து,விமானப்பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறி,பயணியை சென்னை விமானநிலைய…

வழி தவறி சென்ற 2 வயது சிறுமி.. ஒரு மணி நேரத்திற்குள் மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைப்பு

வேலூர், விருதம்பட்டு போலீசார், வழி தவறி  சென்ற 2 வயது சிறுமியை சுமார் ஒரு மணி நேரத்தில்  மீட்டு பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்தனர். காட்பாடி, காந்திநகர் முதல் கிழக்கு  சாலையில் வசிப்பவர் பெற் குண்ட் திவாரி அவரது மனைவி நிவாதிவாரி வசித்து வருகின்றனர்,…

கொரோனா விஸ்வரூபம்.. தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு… 42 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் மேலும் 10,723 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் பல…

மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்..!

மறைந்த நடிகரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ நடிகர் விவேக்கிற்கு திருவாரூரில் பல்வேறு தரப்பினரும் மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர். பிரபல நகைச்சுவை நடிகரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான பத்மஸ்ரீ விவேக், நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சைப் பலனின்றி மருத்துமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு…

முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் காலமானார்

கரூர், முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள வளையப்பட்டியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான பாப்பாசுந்தரம் (86). இவர் கடந்த 7-ம் தேதி வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து திருச்சியில் உள்ள…

Translate »
error: Content is protected !!