3 ஆண்டுகளாக கட்டாமல் இருக்கும் கான்கிரீட் வீடுகளை விரைந்து முடித்து தர வேண்டும் – மலைவாழ் மக்கள் கோரிக்கை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள மலை அடிவாரத்தில் இராசிமலை என்னும் இடத்தில்  35 குடும்பத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 25 ஆண்டுகளுக்கு முன் மலைப்பகுதியில் பாறை இடுக்குகள் மற்றும்…

செங்கத்தில் அக்னி வெயில் சுட்டெறித்து வரும் வேலையில் காற்றுடன் கூடிய மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

எங்களுக்கு உங்கள் FINE தேவை இல்லை.. காவல்துறையினர் நூதன முறையில் அறிவுரை..!

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார்.…

மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு.. மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை..!

தமிழகத்தில் மேலும் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கை நீட்டிக்க மருத்துவக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 24 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கு முடிவடைகிறது.  தற்போது கொரோனா…

ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் தனித்தனி அறிக்கை வெளியிடு..!

அ.தி.மு.கவில், ஓ.பி.எஸ், இ.பி.எஸ், இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், இருவரும் தனித்தனியே அறிக்கை வெளியிடுவது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக, இ.பி.எஸ்சும் உள்ளனர். இருவருக்கும் இடையே, அவ்வப்போது கருத்து வேறுபாடு ஏற்படுவதும்,…

மு.க.ஸ்டாலின் – அழகிரி சந்திப்பு மதுரையில் நடக்காதது ஏன்?

மதுரைக்கு சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினை, தன் வீட்டிற்கு வரும்படி, அவரது அண்ணன் அழகிரி அழைப்பு விடுக்காததாலும், கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாலும், இருவரின் சந்திப்பு கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக…

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்…

பெரியகுளத்தில் கண்மாய் நீரை திறந்து விடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் மனு

பெரியகுளம் கண்மாயில் நீரைத் தேக்கி வைக்க விடாமல் மதகுகளை திறந்து விடும் மீன் வளர்ப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி அணைக்கு…

கொடைக்கானலில் குறைந்த விலையில் நடமாடும் காய்கறி கடைகள் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை..!

கொடைக்கானலில் கடந்த ஆண்டை போல நகராட்சி சார்பாக குறைந்த விலையில் நடமாடும் காய்கறி வாகன மூலம்  அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்கபட்டது போல் தற்பொழுதும் நகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காய் கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி.. தமிழக அரசு உத்திரவு படி காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி கடைகளுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் கொடைக்கானலில் நிலவும் மழை காரணமாக கடைகள் 9 மணிக்கு திறக்கபடுகிறது. 10மணிக்குள் காய்கறி வாங்க கூட்டம் அலை மோதும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை பயன்படுத்தி காய்கறிகளின் விலையும் பல மடங்கு உயர்துள்ளதால் பொதுமக்கள் அவதிபடுகின்றனர் .மேலும் காய்கறிகடைகளில் கூட்டம் அலைமோதுவதால் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் நோய் தொற்று ஏற்படும் சூழல் உள்ளது எனகடந்த ஆண்டு கொரோனா காலத்தில் நகராட்சி சார்பாக ஆணையாளர் நாராயணன் நடமாடும் நியாய விலை காய்கறி கடைகளை பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியுடன் விற்பனை செய்யபட்டது அதே போல் தற்பொழுது உள்ள சூழலில் பொதுமக்கள் வெளியே வராமல் அவர்கள் இருக்கும் பகுதிக்கே சென்று விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Translate »
error: Content is protected !!