தமிழக சட்டப்பேரவை கலைவாணர் கூட்டம் வரும் 11ஆம் தேதி சென்னை அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.. பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெற…
Month: May 2021
அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி – கமிஷனர் சங்கர் ஜிவால்
கொரோனா தடுப்பில், அனைத்து துறைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது தான் போலீசாரின் முதல் பணி என சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்து உள்ளார். சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால், இன்று பொறுப்பேற்று கொண்டார். இதன் பின்னர் அவர்…
தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் முக்கிய 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் மு.க,ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றுக் கொண்டதும் அரசின் செயல்பாடுகளை வேகப்படுத்த உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார் நடிகர் விஷால்..!
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்று இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நடிகர் விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி இருக்கிறார். முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர்…
கொடைக்கானலில் தொடர் பலத்த மழை… மக்கள் கடும் அவதி..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆனந்தகிரி 7வது தெரு பகுதியில் தொடர் மழை காரணமாக பாலம் இடிந்தது. இதனால் இந்த பாலம் அருகில் இருந்த இரண்டு கார்கள் முற்றிலும் சேதமானது. தொடர் மழை காரணமாக பாலம் இடிந்ததில் மழைநீர் இந்த பாலம்அருகில் இருந்த ஐந்து வீடுகளுக்குள் புகுந்தது. வீட்டில் இருந்த மக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். சுமார் இரண்டு மணி நேரம் பெய்த கனமழை காரணமாக இந்த பாலம் இடிந்து உள்ளது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த பாலத்தில் மதகுகள் மற்றும் சேதமான தாங்கு சுவர்களை உடனடியாக சீரமைத்தனர். இதனால் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மற்றும் சாக்கடை நீர் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். பின்னர் நகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் வீட்டிற்குள் புகுந்த மழை நீரை வெளியேற்றினர். மேலும் வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களும் முற்றிலும் சேதமடைந்தன.
கொடைக்கானலில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஏற்றத்தை தொடர்ந்து கொடைக்கானலில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம். தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர்.இதனை தொடர்ந்து இன்று திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் பதவி ஏற்றுள்ளார் இவருடன் அமைச்சர்களும் பதவி ஏற்றுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக கொடைக்கானலில் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் வெற்றியை கொண்டாட பேருந்து நிலைய பகுதி , மூஞ்சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதில் திமுகவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து..!
கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. சென்னை, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை காலை 6 முதல்…
நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா..!
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் கங்கனா ரனாவத் தெரிவித்தது, நான் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். கடந்த சில நாட்களாக கண் எரிச்சலும் இருந்தது. இமாச்சல பிரதேசத்திற்கு செல்ல வேண்டும் என்பதால்…
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக,வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளனர்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் .. திடீர் பொதுநல மனு தாக்கல்..? ஏன்..?
மதுரையைச் சேர்ந்த விரோனிகா மெரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய மூன்று பிளான்ட்கள் செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு திறன்…