காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வருகிற 17-ந்தேதி கூடுகிறது

மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார். காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம், புதிய தலைவர் ஹல்தார் தலைமையில் வரும் 17ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை மற்றும் காவிரி தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில்…

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் ரங்கெர்ட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் இன்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடுதல் வேட்டையின் போது பாதுகாப்பு படையினரை நோக்கி தீவிரவாதி…

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் மற்றும் அனைவருக்கும் நன்றி – ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, முதலமைச்சர்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்து 36,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 9 ரூபாய் குறைந்து 4,529 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 65.30…

உலக அளவில் கொரோனாவால் 5,321,716 பேர் பலி

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 270,412,638 பேர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 243,084,271 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…

21 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற இந்திய அழகி ஹர்னாஸ் சாந்து

இஸ்ரேலின் சுற்றுலா நகரமான எய்லட்  பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில், பிரபஞ்ச அழகி பட்டத்துக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்தியாவின் சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகியாக தேர்வு…

இந்தியாவின் கடந்த 24 மணி நேரத்தில் 7350 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 7,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே…

டெல்லியில் இரவு நேரத்தில் வாட்டும் கடும் குளிர்..!

தலைநகர் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த குளிர்காலத்தில் டெல்லியில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இரவு இதுவாகும். இதற்கிடையில், புதுடெல்லி காற்றின் தரம்…

குன்னூர்: ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இன்று ராணுவ தளபதி நரவனே நேரில் ஆய்வு

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று (திங்கட்கிழமை) குன்னூர் வருகிறார். பின்னர்…

சென்னையில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

Translate »
error: Content is protected !!