வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர்

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில், 870 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி துவங்கி வைத்தார். உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற முனைப்பில், யோகி ஆதித்யநாத் அரசு…

கோடநாடு வழக்கு விசாரணை அடுத்த மாதம் ஒத்திவைப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில், இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு விசாரணை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கில், கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில்,…

பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் கொள்ளை

காஞ்சிபுரத்தில் பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 80 சவரன் தங்க நகை மற்றும் 5 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாருதி நகரில் வசிக்கும் ஆடிட்டர் மேகநாதன் என்பரது வீட்டில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.…

தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம்

தமிழ்நாட்டில் விரைவில் சித்த மருத்துவ பல்கலைகழகம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய சித்த மருத்துவம் தின கொண்டாட்டம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன்,…

4 வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்க

திருநெல்வேலி ஷாப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் பலியான வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் 4 வாரத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி ஷாப்டர் மேல்நிலை பள்ளியில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில்…

முன்னாள் துணைவேந்தர் விவகாரம்: ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழகத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் குழு…

பஞ்சாபின் அமைதியைக் சீர்குலைக்க சிலர் நினைக்கிறார்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப் லூதியானா கீழமை நீதிமன்றத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கழிவறையில் வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் விரைவில் பூர குணமடைய…

6, 7, 8 ஆகிய வகுப்புகளுக்கு மதிப்பீட்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தற்போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது. 6, 7, 8 ஆகிய இடைநிலை வகுப்புகளுக்கு மதிப்பீட்டுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி, 2022 ஜனவரி 5-ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்…

வீட்டில் இருக்கும் போது மாஸ்க் அணிய வேண்டும் – மராட்டிய துணை முதல்வர்

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 269 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார்…

தமிழ்நாடு: 4 மாவட்டங்களில் பரவிய ஒமைக்ரான்..?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:- கொரோனாவை விட வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று…

Translate »
error: Content is protected !!