சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 272 உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 272 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி…
Month: April 2022
பாதாள சாக்கடைத் திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும் – அமைச்சர் கே.என்.நேரு
அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலும், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் கட்டாயம் செயல்படுத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினா விடை நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், புதுக்கோட்டை…
இந்தி தேசிய மொழியா? பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் – மம்தா பேனர்ஜி
இந்தி தேசிய மொழியா என்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும் என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நாடாளுமன்ற அலுவல் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டில் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி இருக்க…
அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப…
சிவகார்த்திகேயனின் டான் படத்தின் 3ஆம் பாடல் நாளை வெளியீடு
அனிருத் – ஜொனிடா இணைந்து பாடியுள்ள சிவகார்த்திகேயனின் டான் படத்தின் 3ஆம் பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் – பிரியங்கா மோகன் நடிப்பில், அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள படம் டான். ஏற்கனவே…
துப்பாக்கி குண்டு வீட்டின் மேற்கூரையில் பாய்ந்ததில் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் சி.ஆர்.பி.எஃப். பயிற்சி தளத்தில், துப்பாக்கிச்சூடு பயிற்சியின் போது, துப்பாக்கி குண்டு அருகிலிருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்தது. எம்.சி.ராஜா தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இன்று காலையில் அவரது வீட்டின் கூரைப்பகுதியில்…
மினி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும்
மினி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பின் தீர்த்து வைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ. பிச்சாண்டி, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தனியார் மினி பேருந்து சேவைகள்…
இன்ஸ்டாகிராம் நட்பினால் ஏற்ப்பட்ட விபரீதம்
சென்னையில் இன்ஸ்டாகிராம் நட்பை கைவிட மறுத்த மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை கணவர் சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அயானவரத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவரது மனைவி ஸ்வேதாவிற்கு கடந்த 2 வாரங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் சத்ய கண்ணன்…
நீர்நிலைகளில் கந்தகப்பொருட்கள் கலந்துள்ளதா என்பது குறித்து நீர் மாதிரிகள் சேகரிப்பு
நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளில் கந்தகப்பொருட்கள் கலந்துள்ளதா என்பது குறித்து நீர் மாதிரிகள் சேகரித்து சிறப்பு வல்லுநர் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சுற்றுச்சூழல்…
தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1,595 வழக்கு பதிவு
சென்னையில் நேற்று ஒரே நாளில் சிறப்பு வாகனத் தணிக்கை மூலம், தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1,595 வழக்குகளும், அதி வேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 403 வழக்குகளும், வேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக 96 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து…