தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை – தமிழக அரசு

கொரோனோ பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் ஆய்வகங்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனியார் ஆய்வகங்களில் வெளியிடப்பட்ட முடிவுகள் குறித்த தரவுகளை உடனுக்குடன் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி…

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவியத் தொடங்கியுள்ளனர். ஜனாதிபதி ஜோ பிடன், மாளிகை கூட கொரோனாவுக்கு எதிரான முழு நோய் எதிர்ப்பு…

திடீரென 15 அடி ஆழத்துக்கு உள்வாங்கிய கிணறு

திருவள்ளூர் மாவட்டத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக இருந்த பழமையான கிணறு ஒன்று திடீரென 15 அடி ஆழத்துக்கு உள்வாங்கியது. பூண்டி அணையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் வழியில், 25 அடி அகலம், 40 அடி ஆழம் கொண்ட, 25 ஆண்டுகள் பழமையான கிணறு…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 29.54 கோடியாக அதிகரிப்பு

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால்…

இந்தியாவில் அதிவேகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. ஒரே நாளில் 58,097 பேருக்கு தொற்று

இந்தியாவில், நேற்று 33,750 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 358…

மும்பையில் முழு ஊரடங்கு விதிக்கப்படும்

மும்பையில் கொரோனா தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை கடக்கும் போது முழு ஊரடங்கு விதிக்கப்படும் என மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களை காட்டிலும் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இன்று நாடுமுழுவதும் 37…

அதிமுக திமுக இடையே வாக்குவாதம்-கைகலப்பு

சேலம் மாவட்டம் ஓமலூரில் பொங்கல் பரிசு வழங்க வந்த எம்.எ.ஏ-வை தடுத்து நிறுத்தியதால் அதிமுக திமுக இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பொங்கல் தொகுப்பு வழங்கும்…

அரசு கவனமாக உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படாவிட்டாலும் மாணவர்களின் கற்றலில் இடைவெளி இருக்கக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் தமிழக அரசின் சார்பில் நியாயவிலைக்கடைகளில் பொங்கல் தொகுப்பு…

அரசியல் காழ்ப்புணர்ச்சி: அம்மா கிளினிக் மூடுவதற்கு கண்டனம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அம்மா கிளினிக் திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா…

Translate »
error: Content is protected !!