30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, 3 கோடி மரங்கள் நடவு

 

கடந்த ஆண்டில் நாடு முழுவதும் 30 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாகவும், 3 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை துறை அமைச்சர் பூபிந்தர் யாதவ்,

பல்வேறு சட்ட விதிகள், நீதிமன்ற உத்தரவுகளின் படி மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை அந்தந்த மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வழங்கி வருவதாகவும், அதன் அடிப்படையில் 2020-2021ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பொது திட்டங்களை செயல்படுத்துவதற்கும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் இடையூறாக இருந்த 30 லட்சத்து 97 ஆயிரத்து 721 மரங்களை வெட்டுவதற்கு உரிய அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக நாடு முழுவதும் 3 கோடியே 64 லட்சத்து 87 ஆயிரத்து 665 மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு 358 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும் எழுத்து பூர்வமாக விளக்கமளித்தார்.

 

Translate »
error: Content is protected !!