வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா இடங்களை பார்த்துவிட்டு இன்று பழனி வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைக்கானல்- பழனி மலைப்பாதையில் கோம்பைக்காடு பகுதியில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் உள்ள 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் இதைக்கண்டு காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.