இந்தியாவில் 5ஜி சேவை – பிரதமர் நரேந்திர மோடி உரை

75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், தற்போது உள்ள இணைய சேவையை விட 10 மடங்கு வேகமான மற்றும் தடை இல்லாத இணைப்பை வழங்கும் 5G சேவைகள் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது என்றார். அதற்கான 5ஜி அலைக்கற்றை ஏலம் சமீபத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

முகேஷ் அம்பானியின் ஜியோ, சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல், கௌதம் அதானியின் குழு மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு 5ஜி தொலைத்தொடர்பு அலைக்கற்றையை ரூ.1.5 லட்சம் கோடிக்கு அரசாங்கம் இந்த மாத தொடக்கத்தில் விற்பனை செய்தது.

2015 இல் அரசாங்கம் ஆப்டிகல் கேபிள் எனப்படும் கண்ணாடி இழை வழியாக நாட்டின் மூலை முடுக்குகளுக்கு இணைய சேவை வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்தது. அந்த பாரத் நெட் சேவை நாட்டில் தொடங்குவதற்கு மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்றார். நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் இணைய வசதி வெகு விரைவிலேயே அமலுக்கு வரும் என கூறினார்.

மேலும் “இப்போது நாம் 5G சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. கிராமங்களுக்கு கண்ணாடி இழைகளை இணைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா கனவு கிராமங்களை கடந்து செல்லும் என்பது நிச்சயம் ,” என கூறினார்.

Translate »
error: Content is protected !!