பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி இன்று தனது 94வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் எல்.கே.அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, பிரதமர் மோடி , துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இது குறித்துபிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு,
“மரியாதைக்குரிய அத்வானி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்துக்கும் பிரார்த்திக்கிறேன். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், நமது கலாச்சாரப் பெருமையை மேம்படுத்துவதற்காகவும் அவர் மேற்கொண்ட பல முயற்சிகளுக்காக தேசம் அவருக்குக் கடன்பட்டிருக்கிறது. அவர் தனது அறிவார்ந்த நோக்கங்களுக்காகவும் வளமான அறிவாற்றலுக்காகவும் பரவலாக மதிக்கப்படுகிறார்” என பதிவிட்டுள்ளார்.