*கோவை வடக்கு தொகுதியில் வேட்பாளர் தங்கவேலு வேட்புமனு தாக்கலில் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் உடன் வருகை.,
*ராயபுரம் தொகுதியில் ஆட்டோ ஓட்டி அமைச்சர் ஜெயக்குமார் வாக்கு சேகரிப்பு!.,
*எதிர்வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக–பாஜக கூட்டணி வெற்றி பெறும்” –சி.டி.ரவி.,
*”தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை ஒதுக்க மறுக்கும் பிரதமர் மோடி, 8 ஆயிரம் கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்கியது எப்படி?” – உதயநிதி ஸ்டாலின்.,
*”தேர்தல் வரும், போகும். மக்கள் நிலையானவர்கள். ஆட்சி நிலையானது” – மம்தா பானர்ஜி.,
*”டெல்லி அரசை கவிழ்க்க ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வாங்க பாஜக முயற்சித்தது” – கெஜ்ரிவால்.,
*தேர்தல் ஆதாயத்திற்காக முதலமைச்சர் பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்!” – ஆர்.எஸ்.பாரதி.,
*அமைச்சர் தங்கமணி ஆதரவாளர்களால் உயிருக்கு ஆபத்து என அதிமுக எம்.எல்.ஏ புகார்!,.
*தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது; இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் மனு தாக்கல்!.,
*நிர்பயா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு.,
*தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் நட்சத்திர பிரச்சார நபர்கள் பட்டியல் வெளியீடு.,
*அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து விராலிமலையில் அதிமுக போட்டி வேட்பாளர் சுயேட்சையாக மனுத்தாக்கல்!.,
*தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிடுவதாக சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் அறிவிப்பு – பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு.,
*மநீம பொருளாளர் சந்திரசேகர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை ரூ. 8 கோடி பறிமுதல்.,
*பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 11.78 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் மற்றும் பிற பொருட்கள் கைப்பற்றபட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் ஆணையாளர் திரு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.,
*உதவி ஆணையர், டி.எஸ்.பி.க்கள் 9 பேரை தேர்தல் அல்லாத பணிக்கு இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர்கள், அன்பரசன், வேல்முருகன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.,
*வாக்குப்பதிவை கண்காணித்திட நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை கண்காணித்திட நுண்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பை கலெக்டர் சிவன்அருள் தொடங்கி வைத்தார்.,
*ஸ்ரீராமபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்து வீடுவீடாக தேர்தல் பரப்புரையை தொடங்கினார் மநீம துணைத் தலைவர் மகேந்திரன்!.,
*ஒரே நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பல்வேறு இடங்களில் இருப்பதை தடுக்க நடவடிக்கை : வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு பரிசீலனை.,
*சீட் கிடைக்காததால் அதிருப்தி – சுயேச்சையாக களமிறங்கும் அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்.,
*மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரம்.,
*அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தவச்செல்வனிடம் வேட்புமனு அளித்தார்.,
*ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத்த தேர்தலில் முதல் முறையாக குஷ்பு காண்கிறார். ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக–வின் நா.எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார்.,
*அதிமுக தலைமை வாய்ப்பு தராததால் சுயேச்சையாக எம்.எல்.ஏ.சந்திரசேகர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து கட்சி எம்.எல்.ஏ சந்திரசேகர் வேட்புமனு தாக்கல் செய்தற். 2016 தேர்தலில் எனக்கு போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார் என அவர் தெரிவித்துள்ளார்.,
*கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அமைச்சர் வேலுமணியை எதிர்த்து தொண்டாமுத்தூரில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிட உள்ளார்.,
*அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்ன நிலையில் உள்ளது என்பதைக் கூற எடப்பாடி பழனிசாமி தயாரா? கும்மிடிப்பூண்டி தேர்தல் பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு.,
*தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கையாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறக்கும்படைகள், கண்காணிப்பு குழுக்கள் இதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஆதாரங்களுடன் கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.,
*அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணைச் செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.,