எத்தனை சீட் தேரும்.. 5 எம்.எல்.ஏக்களாவது கண்டிப்பா வெற்றி வேண்டும் .. பாஜக மேலிடம் உத்தரவு

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் எப்படியாவது 5 எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற வேண்டும் என கறார் உத்தரவு பிறப்பித்துள்ளதாம் டெல்லி பாஜக மேலிடம். தமிழக சட்டசபையில் 2001-ம் ஆண்டு பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். அதன்பின்னர் பாஜகவுக்கு அப்படி ஒருவாய்ப்பே கிடைக்கவில்லை. தமிழக தேர்தல்களில் நோட்டாவுடன் போட்டியிடும் கட்சி என்ற நிலையில்தான் பாஜக இருக்கிறது.


தற்போதைய சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் பாஜக போட்டியிடுகிறது. அதிமுகவிடம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக பார்த்து அடம்பிடித்து கேட்டு வாங்கியிருக்கிறது பாஜக. ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்துக்காக அதிமுக மீதே மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

தமிழக தேர்தல் நிலவரம் தொடர்பாக டெல்லி பாஜக மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட கணிப்புகளிலும் கூட பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்பட்டிருக்கிறது. இது பாஜக மேலிடத்தை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவுடன் எப்படியும் ஆட்சி அமைந்துவிடும் என்கிற நம்பிக்கையில் பாஜக இருக்கிறது. ஆனால் தமிழகம், கேரளாவில் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்களாம் பாஜக தலைவர்கள். இது தொடர்பாக தமிழக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

அப்போது, தமிழகத்தில் ஆகக் குறைந்தபட்சம் 5 எம்.எல்.ஏக்களாவது நமக்கு இருக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதை பாருங்கள்.. சாத்தியமே இல்லை என்கிற பதில் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை என கறாராக சொல்லிவிட்டதாம் டெல்லி மேலிடம். இதனால் 5 தொகுதிகளை மட்டும் குறிவைத்தாவது அதிமுக தயவில் வெல்ல வேண்டும் என்பதில் இப்போது தமிழக பாஜக படுதீவிரமாக உள்ளதாம்.

 

Translate »
error: Content is protected !!