ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை அகற்றுவதே எனது குறிக்கோள் – டி.கே.சிவக்குமார்

ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை அகற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வருகிறோம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. எங்கள் கட்சியில் முதல்மந்திரி பதவிக்கு போட்டி இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்து பா.ஜனதாவை அகற்ற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அந்த குறிக்கோளை அடைய நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வருகிறோம். சதீஸ் ஜார்கிகோளியை கட்டாயப்படுத்தி காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தி இருப்பதாக மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி கூறியுள்ளார். எங்கள் கட்சி சார்பில் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்துவோம்.

இது எங்கள் கட்சி சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அவர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. உப்பள்ளிதார்வாரில் குடிநீர் வினியோகம் செய்யும் பணி, ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரகலாத்ஜோஷி பதில் கூற வேண்டும். குடிநீர் வினியோகம் செய்யும் பணியை அரசு அல்லது உள்ளாட்சி நிர்வாகங்கள் தான் செய்து வருகிறது. ஆனால் உப்பள்ளிதார்வாரில் குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு கொடுத்தது ஏன்?. இதை கண்டித்து காங்கிரஸ் தீவிரமாக போராடும். காங்கிரஸ் எப்போதுமே விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

அதனால் பெலகாவி மக்களவை உள்பட 3 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் விவசாயிகள் காங்கிரசை ஆதரிப்பார்கள். லிங்காயத், மராட்டிய மக்கள் அனைவரும் எங்களின் சகோதரர்களை போன்றவர்கள். நாங்கள் சாதியை வைத்து அரசியல் செய்வது இல்லை. பா.ஜனதாவினர் வேண்டுமென்றால் சாதியை வைத்து ஓட்டு சேகரிட்டும்இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Translate »
error: Content is protected !!