எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’கட்சியில் இருந்து விலகிவிட்டதாகவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் நடிகர் விஜய் பேசுவதில்லை என்றும், ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பிரபல சினிமார் நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை நேற்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தேர்தல் ஆணைய விண்ணப்பத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர், தலைவராக பத்மநாபன், பொருளாளராக விஜயின் அம்மா ஷோபா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதையறித்து நடிகர் விஜயின் ரசிகர்கள் மட்டுமல்ல தமிழக அரசியல் களமே பரபரப்புக்குள்ளானது. உண்மையில், இந்த தகவலை கேட்டதும் நடிகர் விஜய்யே ஒருகணம் ஆடிப்போனார். உடனடியாக, விஜய்யின் செய்தி தொடர்பாளர், கட்சி தொடங்கும் தகவலை மறுத்தார். மேலும், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் எனது பெயரில் கட்சி தொடங்கியதற்கு எனக்கும் தொடர்பு இல்லை என்று நடிகர் விஜய் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்.
இதன் மூலம், விஜய் குடும்பத்தில் அரசியல் கட்சி தொடர்பாக தந்தை மற்றும் மகனுக்கு இடையே மோதல் ஏற்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சூழலில் விஜய்க்கு ஆதரவாக, எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் பொருளாளர் பொறுப்பில் இருந்து, நடிகர் விஜயின் தாய் ஷோபா விலகிவிட்டார்.
இது தொடர்பாக, டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ” தன்னிடம் அரசியல் பற்றி பேச வேண்டாம் என விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பலமுறை கூறிவிட்டார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால், விஜய் எஸ்.ஏ.சி.யிடம் பேசுவதில்லை. அரசியல் கட்சி தொடங்குவது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. அசோசியேஷன் தொடங்குவதாகவே என்னிடம் கையெழுத்து பெற்றார்.
பிறகு, கட்சி தொடங்குவது எனக் கூறி 2வது முறையாக கையெழுத்து கேட்டார். நான் போடவில்லை. அந்த கட்சியில் நான் எந்த பொறுப்பிலும் இல்லை. எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து விஜய்தான் முடிவெடுக்க வேண்டும் என்று, ஷோபா கூறினார்.