நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்புவதற்காக சன்சத் என்ற புதிய தொலைக்காட்சியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நாடாளுமன்ற லோக்சபா டி.வி.யையும், ராஜ்யசபா டி.வி.யையும் இணைத்து ‘ சன்சத்’ டி.வி., என்ற பெயரில் புதிய டிவியைத் துவக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதில் பார்லிமென்ட் நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள், ஆளுகை மற்றும் திட்டங்கள், இந்தியா வரலாறு, கலாச்சாரம் மற்றும் சம காலத்திற்கு உரிய விஷயங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்தும், நான்கு பிரிவுகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்ற பிரதான கூட்ட அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், சன்சத் டிவியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.