திடீர் அப்டேட் வெளியிட்ட “மகான்” படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் இணைத்து நடிக்கும் முதல் படம் “மகான்”. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் மூலம் லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், மகான் படத்தில் இடம்பெறும் “சூறையாட்டம்” என்கிற பாடல் செப்டம்பர் 22ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த திடீர் அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!