பயண நேரத்திலும் கோப்புகளை சரிபார்க்கும் மோடி..

உலக தலைவர்களுடனான மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பயண நேரத்திலும் கோப்புகளை சரிபார்க்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலக தலைவர்களுடனான மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி, தனது நெடுந்தூர விமான பயணத்திலும் ஓய்வெடுக்காது வழக்கம்போல், கோப்புகளை சரிபார்க்கும் பணியை கவனித்துள்ளார். பிரதமர் நரேந்திரமோடி, ஓய்வு நேரத்தை குறைத்து கொண்டு சுமார் 18 மணி நேரம் வேலை பார்ப்பார் என்ற தகவல் அவ்வபோது வெளியாகும். தற்போது அதை நிரூபிக்கும் வகையில் தற்போது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்ற மோடி, தனது பயண நேரத்தை விரயம் செய்யாமல், ஐநா பொது கூட்டத்தில் பேச வேண்டிய ஆவணங்கள், கோப்புகளை சரிபார்த்துள்ளார்.

Translate »
error: Content is protected !!