மராட்டிய மாநிலத்தில் தானே அருகே உள்ள கல்வா ஆட்கோனேஷ்வர் நகரில் உள்ள ஒரு சுகாதார மையத்திற்கு ராஜ்குமார் யாதவ் என்பவர் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அங்கு பணியில் இருந்த டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் செவிலியர் கீர்த்தி ராயத் ஆகியோர் அவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
பின்னர் ஊசி பாட்டிலை கவனித்த ராஜ்குமார், அது கொரோனாவுக்கு தடுப்பூசி என்றும், அது ரேபீஸ் வெறிநாய்கடிக்காக செலுத்தப்படும் ஊசி என்றும் தெரியவந்தது.
இதை பற்றி ராஜ்குமார் தானே மாநகராட்சியில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் டாக்டர் ராக்கி தாவ்டே மற்றும் நர்ஸ் கீர்த்தி உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்