இன்று பிரதமர் நரேந்திர மோடி நகர்ப்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 மற்றும் நகர்ப்புற மாற்றம் மற்றும் புத்துணர்வுக்காக அடல் மிஷன் 2.0 ஐ தொடங்கி வைத்தார். இது அனைத்து நகரங்களையும் ‘குப்பை இல்லா’ மற்றும் ‘நீர் பாதுகாப்பான’ நகரங்களாக மாற்றுவதற்கு வடிவமைக்கப்பட்ட திட்டமாகும். இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.