ஆந்திரா மாநிலம், கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து சென்றவரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
கடப்பா அருகேயுள்ள ராயசொட்டி பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே நீர் நிலையில் இருந்து தரைப்பாலம் வழியாக நீர் வெளியேற்றப்பட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், நாகேந்திரா என்ற காவலர் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனை கண்ட காவலர் அந்த நபரின் காலை பிடித்து இழுத்து காப்பாற்றினார். நீரில் அடித்து சென்றவரை காப்பாற்றிய காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர்.