தீபாவளி பண்டிகை… இன்று முதல் அரசு பேருந்துகளின் முன்பதிவு துவக்கம்

நாடு முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்கள் விடுமுறை தினங்களாக இருக்கும். அதனால் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் http://tnstc.in என்று இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகமான மக்கள் பயணம் செய்வார்கள் என்பதால், கடந்த ஆண்டைப் போல 4,000 க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், சிறப்பு பேருந்துகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Translate »
error: Content is protected !!