மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஷ்ராவின் மகன் விவாசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது கார்மோதியதில் 8 விவாசாயிகள் மரணம். இந்த கொடுர செயலுக்கு நீதி வேண்டி பாஜக அரசை கண்டித்து SDPI கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக மாபெரும் சாலை மறியல் போராட்டம் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
உத்தரப்பிரதேசத்தில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெறும் துயரத்திற்கு ஆளாக்கியது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நேற்று (ஞாயிற்றுக் கிழமை) மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர்.
அப்போது விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த வெறிச்செயலானது வேண்டுமென்ற நடைபெற்றது என்றும் கூறினர். இந்த வன்முறையில் உயிரிழந்தவர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி சென்ற போது அவரையும் உபி அரசாங்கம் கைது செய்தது.
ஆகவே இந்த கொடுர சம்பவத்திற்கு நீதி வேண்டியும், உபி பாஜக அரசை கண்டித்தும் திருச்சி மாவட்டம் SDPI கட்சியின் சார்பாக மாபெரும் சாலை மறியல் இன்று மாலை 04-30 மணியளவில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் தமீம் அன்சாரி தலைமை தாங்கினார். மேலும் மாவட்ட துணைதலைவர் பிச்சைகனி அவர்களும், மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜித், மதர் ஜமால் அர்களும், பொருளாலர் சுஹைப் அவர்களும், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்பாஸ், பகுருதின் ஆகியோர்களும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
இந்த போராட்டத்தில் கட்சியின் அனைத்து தொகுதி, கிளை, வர்த்தக அணி, தொழிற்சங்க அணி என அனைத்து நிர்வாகிகளும், பொதுமக்களும், சமுக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழூப்பினர். இறுதியாக 100 க்கும் மேற்பட்ட நபர்கள் கைதும் செய்யப்பட்டனர்.