தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில், பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தை கடத்திச் சென்ற மர்மப் பெண் ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்தவர்கள் குணசேகரன் ராஜலட்சுமி தம்பதியினர், கடந்த செவ்வாய் கிழமை தஞ்சை அரசு மருத்துவமனையில் ராஜலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்த நிலையில், கடந்த 3 நாட்களாக ராஜலட்சுமிக்கு உதவியாக பெண் ஒருவர் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை அந்த பெண்மணி, பச்சிளம் குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்திச் சென்றுள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்த நிலையில், சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, மருத்துவமனையை விட்டு வெளியே வந்த அப்பெண், ஒரு ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.