மகனால் வந்த சோதனை.. ஷாருக்கான் விளம்பங்களை நிறுத்தியது பைஜூஸ்

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் விளைவாக, மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பரங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்து வைத்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் 2017 ஆம் ஆண்டு முதல் பைஜூஸின் விளம்பர தூதராக இருந்து வருகிறார். இதனால், ஷாருக்கானுக்கு ஆண்டுக்கு ரூ. 3 முதல் 4 கோடி வரை பைஜஸ் நிறுவனம் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் பைஜஸ், சில ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்துள்ளது.

ஷாருக்கானின் மகனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, அந்த நிறுவனம் அவரை தொடர்பு கொள்ள விரும்பவில்லை, அவருடனான விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும், அவர் விளம்பர தூதராக நீடிப்பாரா? அல்லது நிறுவனம் அவரை முழுமையாக கைவிட்டதா என்பது பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.

Translate »
error: Content is protected !!