புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோ. (வயது 46) இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.
புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அவரது மறைவு செய்தி அறிந்த ரசிகர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழந்தார் என தகவல் வெளியான நிலையில் பெங்களூருவில் பாதுகாப்பை அதிகரிக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு கன்னட திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.