புனித் ராஜ்குமார் மறைவுக்கு திமுக எம்.பி கனிமொழி இரங்கல்

புனித் ராஜ்குமார் கன்னட திரையுலகில் பிரபலமான ஹீரோ. (வயது 46) இவர் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகன் ஆவார்.

புனித் ராஜ்குமார் இன்று காலை மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை  அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு ஏ.ஆர்.ரகுமான், சோனு சூட், சாந்தனு, மனோபாலா, பிரியா ஆனந்த், தனஞ்செயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்., திமுக எம்.பி.,கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர்,

மக்களின் மனம் வென்ற, கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவு, திரையுலகிற்கு பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!