பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114-வது பிறந்த நாளையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முத்துராமலிங்கத் தேவர் வசித்த இல்லத்துக்குச் சென்ற முதல்வர் அங்குள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார்.

முன்னதாக, பசும்பொன் செல்லும் வழியில், மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!