உருமாறிய புதிய கொரோனா வைரஸ்.. வெளியானது அதிர்ச்சி தகவல்

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. மேலும் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. டெல்டா வைரஸின் புதிய துணை வைரஸ் ஏ.ஒய்.4.2.என்ற புதிய வைரஸ் கன்றையப்பட்டுள்ளது. இது டெல்டா வைரஸை விட 15 சதவீதம் அதிகமாகத் தொற்றக்கூடியது. இந்தியா உட்பட 42 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆந்திராவில் 7 பேரும், கேரளாவில் 4 பேரும், தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் தலா 2 பேரும், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒருவருக்கும் என மொத்தம் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பெரும்பாலும் இங்கிலாந்தில்தான் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!