ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தம் ! பிரிக்ஸ் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது; அதை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி இருக்கிறார்.

பிரிக்ஸ் நாடுகளின் 12வது மாநாடு இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது. ரஷ்யா ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேறுள்ளன.

இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசும்போது, ஐக்கிய நாடுகள் சவையின் 75-வது ஆண்டு தினம் தற்போது கடைபிடிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் ஐ.நா. பாதுகாப்பு சபையை சீர்த்திருத்தம் செய்வது அவசியமாகும்.

உலகில் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை பயங்கரவாதம்தான். சர்வதேச அமைப்புகளின் திறன்கள் பற்றி கேள்வி எழுப்பப்படுகின்றன. இதற்கு முக்க்கிய காரணம் என்னவெனில், நடப்பு சூழலுக்கு ஏற்ப ஐ. நா. பாதுகாப்புச்சபை மாற்றம் கொண்டு வரப்படாததே ஆகும்.

இந்தியா, பன்முகத்தன்மைக்கு ஆதரவளிக்கும் முதன்மையான நாடு. இந்திய பாரம்பரியப்படி ஒட்டு மொத்த உலகமும், ஒரே குடும்பம்தான். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை, அதற்கு பொறுப்பேற்கச் செய்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார்.

கொரோனா தொற்றுநோய்களின் போது சர்வதேச சமூகத்திற்கு இந்தியாவின் பங்களிப்பைக் குறிப்பிடுகையில், இந்தியாவின் மருந்தியல் துறையின் வலிமை காரணமாக, ஊரடங்கு காலத்தில் 150’க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முடிந்தது என்று பிரதமர் கூறினார்.

இந்த மாநாட்டில் சீனா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், ரஷியா சார்பில் அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்றுள்ளனர்.

Translate »
error: Content is protected !!