தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் காய்கறி மார்கெட்டுக்கு கொண்டுவரும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தக்காளியின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் முருங்கைக்காய் விலை இருமடங்காக உயர்ந்து ரூ.110 ஆகவும், கத்தரிக்காய், கேரட், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.