கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கேரளாவின் 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கும், நாளை பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், இடுக்கி நீர்த்தேக்கத்தின் செருதோணி அணையின் ஷட்டர்கள் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும். எனவே இடுக்கி அணையின் தாழ்வான பகுதிகள் மற்றும் பெரியாறு கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கலெக்டர் எச்சரித்துள்ளார்.