கேரளாவில் நோரோ வைரஸ் பரவி வருவதால் தமிழக-கேரள எல்லையில் நடைபெற்று வரும் சோதனை தீவிரமடைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் தமிழகம் முழுவதும் 5,000 மருத்துவ முகாம்களை துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைக்காலத்தில் மக்கள் நோய்வாய்ப்படாமல் இருக்க நடத்தப்படும் இந்த முகாம்களில் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என கூறினார்.