தமிழ்நாடு சிமென்ட் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட “வலிமை” சிமென்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து வைத்தார். இந்த சிமெண்ட் மூட்டை 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த சிமென்ட் உலகம் செய்வோம் என்ற கருத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிமென்ட் குறைந்த விலையிலும், உயர் தரத்திலும் தயாரிக்கப்படுகிறது. சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டது.