வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. இடஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு தவறானது. மதுரை கிளையின் உத்தரவால் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்து, இடஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உள் இடஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி பா.ம.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.